Tuesday, October 4, 2011

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு,

உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது
சென்னை: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2...009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) என்னும் அரசியல் பேரியக்கம் தொடங்கப்பட்டது. சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசிய்ல் சக்தியாய் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவதும் வேகத்துடனும் அதே சமயம் விவேகத்துடனும் பயனித்து வருகிறது.
தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து முதன் முறையாக களம் இறங்கிய எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் தோல்வி அடைந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்று பெறும் பெறும் கட்சிகளின் புருவத்தை உயரவைத்தது.
தற்போது நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக இஸ்லாமிய, கிறிஸ்தவ இயக்கங்கள் மற்றும்க் தலித்கள் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தல் களம் காண இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளிலும், வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் இரு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் முன்னரே எஸ்.டி.பி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் அதே சமயம் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் எஸ்.டி.பி.ஐ இந்திய தேசத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கீழ்கண்ட எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எண் ஊர் பெயர் வார்டு எண் வெற்றிபெற்றவரின் பெயர் மாவட்டம்
1 சித்தார்கோட்டை 5 பரகத் நிஷா இராமநாதபுரம்
2 சிக்கல் 6 பஷீர் அஹமது இராமநாதபுரம்
3 ஏர்வாடி 66 சிதுரத் பேகம் இராமநாதபுரம்
4 சிறுபோது 2 செய்யது அலி இராமநாதபுரம்
5 மல்லிப்பட்டிணம் 3 நஜிமுன்னிஷா தஞ்சாவூர்
6 இருமேணி 3 அப்துல் ஹக் இராமநாதபுரம்

7 கேம்பலபாத் ரிஃபாய் ஆதம் பாஷா தூத்துக்குடி
8 செய்துங்கநல்லூர் ஜொஹரா தூத்துக்குடி
9 மியான்பள்ளி ஜீனத் தூத்துக்குடி
குறிப்பு: தகவல் 03.10.2011 வரை
thanks puthiyavanam

Sunday, October 2, 2011

6 Million Americans Converted to Islam in USA after 9/11 report by CNN

இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?

இதோ! விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கர்ப்பம் தர...ித்த மதீனத்து மாது ஒருத்தி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அதற்கான தண்டனையைத் தாருங்கள் என்று கேட்கிறாள். என்ன தண்டனை? அதனை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். திருமணமானவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்பதுதான் அது! அந்தத் தண்டனையைத்தான் தேடி வருகிறாள். தண்டனை பெற்றால்தான் இறைவன் அக்கொடிய பாவத்தை மன்னிப்பான் எனும் உறுதியுடன் வருகிறாள். இஸ்லாத்தின் வரலாற்றைத் தவிர வேறெங்கும் இதற்கு நிகரான நிகழ்ச்சியை நாம் காண்பது அரிது!

இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை பெற்றெடுத்ததும் இவளை என்னிடம் அழைத்து வாரும்.

அவ்வாறே அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அவளை நபியவர்களிடம் அழைத்து வந்தார் அவர். அவளது விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அவள் மீது அவளுடைய ஆடைகள் கட்டப்பட்டன. பிறகு கல்லெறிந்து அவளைக் கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு நபியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அப்பொழுது உமர்(ரலி)அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே! இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்தப் பெண்மணி தேடிக் கொண்டது எத்தகைய பாவமீட்சியெனில், அதனை மதீனத்து முஸ்லிம்களில் எழுபது பேருக்குப் பங்கீடு செய்தால் அவர்கள் அனைவருக்கும் அது போதுமாகி விடுமே! அல்லாஹ்வின் வழியில் தனது உயிரையே இவள் ஈந்து விட்டாளே! இதனைவிடவும் சிறந்த நிலையொன்றை நீர் கண்டுள்ளீரா என்ன? ” நூல்: முஸ்லிம்

Saturday, September 24, 2011

Hunger in Africa



ஆபிரிக்காவின் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பஞ்சத்தால் ஏழரை லட்சம் பேர் சாவின் விளிம்பில் உள்ளனர்  என ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும் 40 லட்சம் மக்கள்  உலக நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள  எத்தியோப்பியா சோமாலியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது
சோமாலியாவில் 1991ல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப் பகுதி  அல் ஷபாப் அமைப்பிடம் சிக்கியுள்ளது. பிற பகுதிகள் பல்வேறு இனக் குழுக்களிடம் உள்ளன.
தலைநகர் மொகாடிஷூவும் வேறு ஒரு சில பகுதிகளும் மட்டுமே அரசு வசம் உள்ளன.
இந்நிலையில் ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து உணவு ஆராய்ச்சிக்கான அமைப்பு (எஸ்.எஸ்.என்.ஏ.யு.) வெளியிட்டுள்ள அறிக்கையில்  இது குறித்து
சோமாலியாவில் மொத்தம் 40 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பஞ்சம் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில்  ஏழரை லட்சம் பேர் இறந்து விடுவர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பலர் பட்டினியால் இறந்து விட்டனர்.
இந்த 40 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் நாட்டின் தென்பகுதியில் தான் உள்ளனர். ஒட்டு மொத்தமாக  கிழக்கு ஆபிரிக்காவில் மட்டும்  1 கோடியே 20 லட்சம்  மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  இந்தாண்டு மழையே இல்லாததால்  சோமாலியா எத்தியோப்பியா  கென்யா ஆகிய நாடுகள் பஞ்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ஜிபவுட்டி  எரித்ரியா மற்றும் உகாண்டா நாடுகளிலும்  மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

பிரான்ஸில் முகத்தை மூடிய இரு முஸ்லிம் பெண்களுக்கு அபராதம்


பொது இடங்களில் முகத்தை மூடி உடை அணிந்திருந்த முஸ்லிம் பெண்களான ஹிந்த அஹ்மாஸ் மற்றும் நஜாத் நைத்தாலி ஆகிய இருவருக்கும் பிரான் நீதிமன்ற அபராதம் விதித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிந்த அஹ்மாஸுக்கு 120 யூரோவும் (164 டொலர்), நஜாத் நைத்தலிக்கு 80 யூரோவும் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஹிந்த அஹ்மாஸ், இது ஒரு மனித உரிமை மீறலாகும். ஆகவே, தான் ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்தார். மேலும் அவர் பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இங்கு தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைப் பற்றி நான் கவலைப் படவில்லை, மாற்றமாக ஒரு பெண் தன்னுடைய மத நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கு தடைவிதித்தமைக்கு எதிராகவே தான் உயர் மனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தார்.

9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது

முன்னால் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில்,மன்ஹாட்டன் நகரில் இருந்த இரட்டை கோபுரம்நியூயார்க் நகர்பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும்இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது.
அரப் முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவதுஇத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்றுவிழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்
மேலும் பெண்டகன் தாக்குதல் குறித்து முஹம்மது தெரிவிக்கும்போதுபெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதாஎன வினவியுள்ளார்
மேலும் கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவாஎனக் கேட்டுள்ளார்
அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும் கேட்டுள்ளார். மேலும் புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள்ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவவீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னால் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.